tamilnadu

img

அரசுப் பேருந்துகளை, தொழிலாளர்களை மேம்படுத்துக!

நாகப்பட்டினம், ஜூலை 2- தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்து - சிஐடியு ஊழியர் சங்கத்தின் 16-வது மண்டல மாநாடு, திங்கட் கிழமை மாலை, நாகையில்  எழுச்சி யுடன் துவங்கியது. ஜூலை-1, 2 ல், இரு நாட்கள் மாநாடு நடை பெற்றது.  நாகப்பட்டினம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு, சங்கத்தின் செங்கொடியை, அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனச் செயலாளர் ஏ.பி.அன்ப ழகன் ஏற்றிவைத்தார். பேரணிக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சினி. மணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரு மான வி.மாரிமுத்து, வாழ்த்துரை வழங்கிப் பேரணியத் துவக்கி வைத் தார். இதில் போக்குவரத்து ஊழி யர்கள் 400க்கு மேற்பட்டோர் செஞ் சட்டை அணிந்து, செம்படைப் பேர ணியாய்ச் சென்றனர்.  பேரணி சென்ற வழியில், அரசுப் போக்குவரத்துக் கழக நாகை மண் டலப் பணிமனை முன்பு, சிஐடியு கொடியை சம்மேளனத் துணைப் பொதுச்செயலாளர் பா.பாலகிருஷ் ணன் ஏற்றி வைத்தார். புதிய பேருந்து நிலையம் அருகே, நாகைத் தொழிற் சங்கப் பேரமைப்பின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது. பேரணி, மாநாடு நடைபெறும், மேலக்கோட்டைவாசல், சிவசக்தி மண்டபம், தோழர் வி.எம்.கிருஷ் ணன் நுழைவு வாயிலை அடைந்தது.

பொது மாநாடு

தோழர் கோ.வீரய்யன் நினைவு அரங்கத்தில் பொது மாநாடு நடை பெற்றது. மாநாட்டிற்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் சீனி.மணி தலைமை வகித்தார். அரசுப் போக்கு வரத்து ஊழியர் சம்மேளனத் துணைப் பொதுச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன்  சிறப்புரையாற்றி னார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ. கிருஷ்ணமூர்த்தி, டாஸ்மாக் ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் சு.சிவ குமார், நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலா ளர் சு.மணி, அரசு விரைவுப் போக்கு வரத்து ஊழியர் சங்க நாகைக் கிளைச் செயலாளர் ஆர்.சண்முகம் ஆகியோர் உரையாற்றினர். கிளைச் செயலாளர் எம்.பரமசிவம் நன்றி கூறினார்.

2-ஆம் நாள் மாநாடு
இரண்டாம் நாள் பிரதிநிதிகள் மாநாட்டிற்கு, பி.முருகன் தலைமை வகித்தார் என்.பாஸ்கரன் சங்கக் கொடியை ஏற்றினார். துணைப் பொதுச் செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன் வரவேற்புரையாற்றி னார். துணைப் பொதுச் செயலா ளர் எஸ்.வைத்தியநாதன் அஞ்சலித் தீர்மானங்கள் வாசித்தார். கெளர வத்தலைவர் ஆர்.மனோகரன் துவக்கவுரையாற்றினார். பொதுச் செயலாளர் கி.மணிமாறன்வேலை அறிக்கையும் பொருளாளர் கே. தாமோதரன் நிதிநிலை அறிக்கை யும் முன் வைத்தனர். சிஐடியு தஞ்சை மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால், சி.ஐ.டி.யு. திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், சம்மேளனத் துணைச் செயலாளர் ம.கண்ணன், சங்கத் துணைத் தலைவர் ந. பாலசுப்பிரமணியன், புதுக்கோட்டை எஸ்.பாலசுப்பிரமணியன், சம்மேளனத் துணைத் தலைவர் எல்.சிவகுமார், திருச்சி பொதுச் செயலாளர் எம்.கருணாநிதி மற்றும் மத்திய சங்க நிர்வாகிகள் வி.திருநாவுக்கரசு, ஏ.கோவிந்தராஜ், என்,கண்ணன், என்.ராமகிருஷ்ணன், பி.அழ கர்சாமி, சி.அமலதாஸ், டி.காரல் மார்க்ஸ், ஏ.பஞ்சநாதன், கே.ராம மூர்த்தி, ஆர்.வெங்கிடாசலபதி, எஸ்.ராமசாமி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். சங்கத்தின் சம்மேளனச் செயலாளர் ஏ.பி.அன்ப ழகன் நிறைவுரையாற்றினார். காவிரி டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடு! தொழிலாளர்களின் வேலைப் பளுவைக் குறைத்துக் காலிப் பணி யிடங்களை நிரப்பிடு!   ஓய்வூதியர் களுக்குப் பணப் பலனை உடனே வழங்கு!, பொறையார் பணிமனை ஓய்வறை இடிந்து விழுந்த விபத்தில் பலியான தொழிலாளர் களின் வாரிசுகளுக்கு வேலைகொடு! 2019, செப்டம்பர்-1 முதல் புதிய ஊதியத்தை அமல்படுத்திட உட னடியாகப் பேச்சுவார்த்தை நடத்திடு உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்
கெளரவத் தலைவர் ஆர்.மனோ கரன், தலைவர்-பி.முருகன், பொதுச் செயலாளர்-ஜி.மணி மாறன், பொருளாளர்-கே.ராம மூர்த்தி, துணைப் பொதுச் செய லாளர்கள்-எஸ்.ஆர்.ராஜேந்திரன், கே.வைத்தியநாதன், ஜி.கோவிந்த ராஜ், துணைத் தலைவர்கள் சி.ஜெய பால்,சீனி.மணி,டி.முருகையன் மற்றும் 6 பேர் இவர்கள் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப் பட்டனர்.