கரூர், ஜூன் 30- கொங்கு சகோதயா சி.பி.எஸ்.இ பள்ளிகளின் கூட்டமைப்பு மற்றும் பரணி வித்யாலயா பள்ளி சார்பில் மாநில அளவிலான ஆசிரியர் பயிற்சி முகாம், பரணி கல்வி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு பரணி பார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன் முன்னிலை வகித்தார். பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சுதாதேவி வரவேற்புரையாற்றினார். துணை முதல்வர் பிரியா நன்றியுரையாற்றினார். பரணி கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வரும், கொங்கு சகோதயா கூட்டமைப்பின் தலைவருமான முனைவர். ராமசுப்பிரமணியன் பயிற்சி அளித்தார். டீச் போர்ஸ் அமைப்பின் பயிற்சியாளர் பிரவீன்குமார் பயிற்சி வழங்கினார். முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சி.பி.எஸ்.இ பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.