தரங்கம்பாடி, செப்.14- மக்கள் மறந்து வரும் பாரம்பரிய தமிழ் உணவுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக உணவுத் திருவிழா நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வெள்ளியன்று நடைபெற்றது. மல்லியத்தில் பெஸ்ட் கல்வியியல் கல்லூரி, மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் மற்றும் ஜேசி சங்கம் சார்பில் நடந்த பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சிக்கு பெஸ்ட் கல்வியியல் கல்லூரி நிர்வாக அலுவலர் ராமன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் குமார், ரோட்டரி சங்க தலைவர் ஜனார்த்தனன், ஜேசீஸ் சங்க தலைவர் சரவணன், ஏ.ஜி.ஆர்.ஏ.கல்வியியல் கல்லூரி தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் லெட்சுமி வரவேற்புரையாற்றினார்.விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற உணவு திருவிழாவில் கம்பு, கேழ்வரகு, உளுந்து, பயறு, சிவப்பு அரிசி, கோதுமை, கீரை வகைகள், சோளம், ராகி, கொள்ளுபோன்ற சிறுதானியங்கள் மற்றும் நவ தானி யங்களைக் கொண்டு 150-க்கும் மேற்பட்ட வித விதமான பாரம்பரிய உணவு வகைகளை மாணவிகள் தயாரித்து காட்சிக்கு வைத்தனர். மேலும் இனிப்பு வகை கள் தயார் செய்வது குறித்து நிபுணர்களால் நேரடி செயல்முறை விளக்க நிகழ்வும் நடைபெற்றது. சிறந்த பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்த மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க ப்பட்டது. கல்லூரி உதவி பேராசிரியர் ரம்யா நன்றி கூறி னார்.