திருச்சிராப்பள்ளி, பிப்.17- சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து சமுதாய மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஞாயிறு அன்று கண்டன பொதுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நத்தரியா மஹல்லாஹ் சுன்னத் ஜமாத் தலைவர் தர்கா அமீன் தலைமை வகித்து பேசியதாவது: இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் தங்களது உயிர்களையும் உடமைகளையும் இழந்து போ ராடியவர்கள் சுதந்திர போராட்டத்தின் போது காந்தியடி கள் திருச்சி வந்த போது அவரின் பாதுகாப்பு குறித்து கேட்ட போது திருச்சி முகமது அலி, சௌகத் அலி ஆகியோர் எனது இரண்டு தோள்பட்டைகளாக இருக்கும் போது எனக்கு எதற்கு பாதுகாப்பு என இஸ்லாமியர்களை பெரு மைப்படுத்தியவர் மகாத்மா காந்தி. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திர போராட்டத்தின் போது ஒரு படையை உருவாக்கியவர். அதற்கு எதிராக செயல்பட்ட அமைப்பு தான் ஆர்எஸ்எஸ் என்றார். முதன்மை பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில்: குடியுரிமை சட்டம் குறித்து மோடியும் அமித்ஷாவும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர். மத்திய அரசு இயற்றிய ஒரு சட்டத்திற்கு 11 மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இதுவே முதல்முறை. பிஜேபி ஆளும் அஸ்ஸாம் மாநிலத்திலேயே பிஜேபி முதல்வரே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரிய பங்கு வகித்த காங்கிரஸ், முஸ்லிம் அமைப்புகள், அரசு அதிகாரிகள் என யாரிடமும் ஆலோசனை கேட்காமலேயே பிஜேபி அரசு தன்னிச்சையாக இந்த சட்டத்தை இயற்றியதால் தான் இந்தியா முழுவதும் இவ்வளவு பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது என்றார். கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, ஐஎன்எல்பி மாநில பொது செயலாளர் ராஜா உசேன், தமுமுக மாநில பேச்சாளர் நௌசாத் எஸ்டிபிஐ கட்சி மாநில செயலா ளர் அபுபக்கர் சித்திக் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். முன்னதாக நத்தரியா மஹல்லாஹ் சுன்னத் ஜமாத் செயலாளர் சையது ஜாஹிர் வரவேற்றார். தர்கா தசா நன்றி கூறினார்.