திருச்சிராப்பள்ளி, ஏப்.12-இற்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியதலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- இந்தியாவை மதச்சார்புடைய நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் பாரதிய ஜனதாவை அப்புறப்படுத்தும்தேர்தல் இதுவாகும். மோடி அரசு அனைத்துவகையிலும் தோல்வி கண்டுள்ளது. மக்களை ஏமாற்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது.அனைத்து விதத்திலும் பாரதிய ஜனதா தோல்வியுற்ற கட்சி ஆகும். 2014 ல் கூறிய அத்தனையும் இந்ததேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள் ளது. அந்த அறிக்கையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.ராமர் கோவில் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் ராமர் கோவில்கட்டுவோம் என்று உறுதி அளிக்கப்பட்டுள் ளது. இதுகோர்ட்டை உதாசீனப்படுத்துவது ஆகும். அதுவும் கோவில் கட்டுவது அரசுவேலை அல்ல. ரபேல் விமான ஊழல் பிரச்சனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தற்போதுவிசாரணைக்கு எடுத்துள்ளது. அதுவும் பத்திரிகைகளில் வெளிவந்த சம்பந்தப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்; விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முன்வந்தள்ளது பாராட்டுக்குரியது. இதன் மூலம் பத்திரிகை சுதந்திரம் நிலை நாட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தமிழகத்தில்நடக்கிற 22 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே வெற்றிபெறும்.இந்திய தேர்தல் ஆணையம் உலக அளவில் தலைசிறந்தது. ஆனால் வருமானவரி அதிகாரிகளை தூண்டி எதிர்க்கட்சியினர் வீடுகளில் சோதனை செய்கிறார்கள்.தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக பாரபட்சமாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திஇந்தியா முழுவதும் உள்ள அனைத்துஎதிர்க்கட்சி தலைவர்களும் கையெழுத் திட்ட புகார் மனுவை ஜாதிபதியிடம் அளிக்கஇருக்கிறோம். தேர்தல் ஆணையத்தின் மீதுநம்பிக்கை இல்லாத நிலை உள்ளது. இதுஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றார்.