tamilnadu

திருவாரூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

திருவாரூரில் இன்று பிரகாஷ்காரத் பிரச்சாரம்


திருவாரூர், ஏப்.7-நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரபொதுக்கூட்டம் திருவாரூரில்திங்கட்கிழமை நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் தெற்கு வீதியில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையேற்கவுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் சிறப்புரையாற்றுகிறார். திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நாகை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தலைவர்கள், நிர்வாகிகள், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.


திருவாரூரில் இன்று பிரகாஷ்காரத் பிரச்சாரம்


அரியலூர், ஏப்.7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சார கலந்தாய்வு கூட்டம், மாவட்டக்குழு உறுப்பினர் மகாஜன்தலைமையில் ஜெயங் கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டணி தோழர் சிதம்பரம் தொகுதி வேட்பாளரான திருமாவளவனை ஆதரித்து 9-ம் தேதி அன்று ஜெயங் கொண்டம் சன்னதி தெருவில்நடைபெற உள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்கிறார். எனவே ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொள்வது எனதீர்மானிக்கப்பட்டது. மேலும் அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரக் கூட்டம் நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்மணிவேல், ஜெயங்கொண் டம் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், மாவட்டக் குழு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


பேராவூரணி: ரூ.1 லட்சம் பறிமுதல்


தஞ்சாவூர், ஏப்.7-பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொள் ளுக்காடு கூட்டுறவு அங்காடிஅருகில் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் தலைமையில் பறக்கும்படை அலுவலர்கள் சனிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் உரிய ஆவணங் கள் இன்றி இருந்த ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 850 பறிமுதல் செய்து பேராவூரணி உதவித் தேர்தல் அலுவலர் அ.கமலக்கண்ணனிடம் ஒப்படைத்தனர்.