கடலூர், அக். 23- கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய திடீர் சோத னையில் ரூ.1.02 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் கேப்பர்மலையில் வட்டார போக்கு வரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேருந்து உரிமை யாளர்கள் மற்றும் கனரக வாகனங்களின் உரிமை யாளர்களிடமிருந்து இனாம் பெறப்பட்டு வருவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, துணை கண்காணிப்பாளர் மெல்வின்ராஜாசிங், ஆய்வாளர் அமுதா மற்றும் காவலர்கள் வட்டார போக்குவரத்து அலுவல கத்திற்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர். இச்சோ தனை மாலை வரையில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அப்போது கணக்கில் வராமல் பல்வேறு அலுவலர்கள் வைத்திருந்ததாக ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லையென தெரிவித்தனர்.