நாகப்பட்டினம், ஏப்.12-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து வியாழக்கிழமை இரவு நாகூர் தர்கா அலங்கார வாசலில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.சி.பி.ஐ.மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, சி.பி.ஐ. மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் நாகூர் தமீமுன்அன்சாரி ஆகியோர் உரையாற்றினர். சி.பி.எம். நாகை நகரச் செயலாளர் எம்.பெரியசாமி, நாகூர் கிளைச் செயலாளர் எஸ்.எம்.பாரூக்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் சி.பி.ஐ.தேசியச் செயலாளர்து.ராஜா பேசியதாவது, ‘‘இந்து - முஸ்லிம்ஒற்றுமைக்காக அரும்பாடு பட்டவர் காந்திஜி. புகழ்பெற்ற அவரது பிரார்த் தனை பாடலான- ‘‘ரகுபதி ராகவ ராஜாராம், பதீத்த பாவன சீத்தாராம், ஈஸ்வர அல்லா தேரே நாம், சப்கோ சன்மதி தேபகவான்…’’ என்பது. இதற்காகவே அன்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் காந்தியைக் கொன்றார்கள்.
‘‘சப்கோ சன்மதி தே பகவான்..’’ என்றால், ‘‘இறைவா ! எங்கள் மக்களுக்கு நல்ல புத்தியைக் கொடு’’ என்று பொருள். ஆனால், காந்தி இன்றிருந்தால், அந்தப் பாடலை, ‘‘இறைவா ! இந்த மோடிக்கும் அமித்ஷாவுக்கும் நல்ல புத்தியைக் கொடு’’ என்று மாற்றியிருப்பார்.அனைத்து மத மக்களும் நேசிக்கும் இடம் நாகூர் தர்கா. ‘‘ஜாரே ஜஹான்சே அச்சா..’’ என்று கீர்த்தி பெற்ற இஸ்லாமியக் கவிஞர் அல்லாமா இக்பால் பாடிய நாட்டுப் பற்றுப் பாடல். இதைத்தான் நமது ராணுவ இசையாக இசைக்கப் படுகிறது. இதைத்தான், பாரதி,”பாருக்குள்ளே நல்லநாடு” என்று பாடினார். ஆனால், இந்த உண்மையான தேசப்பற்றை, மத நல்லிணக் கத்தை, மக்கள் ஒற்றுமையைக் குலைக்க முயல்கிறது ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.கூட்டம்.இந்தியா பல மாநிலங்களைக் கொண்ட தேசம். பல்வேறு மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், இனங்கள் என்ற ஒன்று பட்ட அற்புத பூமி இது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்..ம் பி.ஜே.பி.யும் இந்த மக்கள் ஒற்றுமையைத் தகர்த்து, ’ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒற்றைக் கலாச்சாரம் என மாற்றத் துடிக்கிறது. நம் தேசம், காந்தியின் மத நல்லிணக்கம் வளர்ந்த தேசம், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் ஜைனர்கள் எனஅனைத்து மக்களுக்கும் அம்பேத்கர் தனதுஅரசியல் சாசனம் மூலம் அனைத்து உரிமைகளையும் சமத்துவச் சட்டக் கோட்பாடுகளையும் வழங்கியிருக்கிறார்.பி.ஜே.பி.மீண்டும் ஆட்சிக்கு வந்தால்எல்லாம் தகர்ந்து போய் விடும். அன்பு மக்களே, கவனமாக இருங்கள்! இத்தேர்தல் பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கும் தேர்தல். இது இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போர். இந்தத் தேர்தல் மூலம்பாசிச- சர்வாதிகாரி மோடியையும் பி.ஜே.பி.யின் அடிவருடிகளாகிப் போன அதிமுக கூட்டத்தையும் தோற்கடிப்போம், தேசத்தையும் தமிழகத்தையும் காக்க வேண்டியது நம் கடமை. நம் உரிமை. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து வாக்களித்து வெற்றி தாருங்கள். இவ்வாறு து.ராஜா பேசினார்.