புதுதில்லி, ஆக.6- ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டப்பிரிவு 370 மூலம் வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகளை, மோடி அரசு ரத்து செய்திருப்பதற்கு, புகழ்பெற்ற வரலாற்றாசி ரியர் ராமச்சந்திர குஹா கண்டனம் தெரி வித்துள்ளார். “இப்படி தன்னிச்சையாக காஷ்மீர் பிரச்சனையில் பாஜக ஈடுபட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், நாளை எந்த மாநிலத்துக்கு வேண்டுமா னாலும் இந்த நிலை ஏற்படலாம்” என்று குஹா எச்சரிக்கை விடுத்துள்ளார். “இது காஷ்மீர் குறித்த பிரச்சனை என்று விட்டுவிடாமல், ஒரு அரசு, தனக்கி ருக்கும் அதிகாரத்தை எப்படி துஷ்பிரயோ கம் செய்கிறது என்பதை ஒவ்வொரு இந்தி யனும் யோசித்துப் பார்க்க வேண்டும். 1.2 கோடி மக்கள் இருக்கும் ஒரு மாநிலம் குறித்து எடுக்கப்பட்ட முடிவு அவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ளாம லேயே எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அரசி யல் சட்ட சாசனத்தைப் பாதுகாக்கவில்லை என்றால், இன்று காஷ்மீரில் நடந்தது நாளை உங்கள் மாநிலத்திலும் நடக்கும்” என்று குஹா குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில், குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்தின் செயல்பாட்டை யும் குஹா விமர்சித்துள்ளார். “மிகவும் சிக்கலான ஒரு விஷயம் குறித்து குடியரசுத் தலைவருக்கு ஒரு கோப்பு வருகிறது என்றால், அது குறித்து நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். அதுவும் காஷ்மீர் போன்ற விவகாரத்தில்…முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். போன் இணைப்பு, இணைய சேவை என எல்லாம் முடக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நேரத்தில் குடியரசுத் தலை வர் சரியாக நடந்து கொள்ளவில்லை” என்று குஹா குற்றம் சாட்டியுள்ளார்.