tamilnadu

img

மாற்றுத்திறனாளி பெண் வீட்டை இடித்த வி.ஏ.ஓ, வட்டாட்சியர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 21- திருச்சி மாவட்டம் துறை யூர் வட்டம் உப்புலியபுரம் ஒன்றியத்தில் தளுகை பஞ்சாயத்தில் மாற்று த்திறனாளி பெண்ணின் வீட்டை சட்டவிரேதமாக இடித்த கிராம நிர்வாக அலு வலர் மீதும், அதற்கு துணை போன துறையூர் வட்டாட்சி யர் மீதும் நடவடிக்கை எடுக்க  வேண்டும். தளுகை பகுதியில் உள்ள  கனிம வளங்கள் களவு போவ தற்கு துணை நின்ற கிராம  நிர்வாக அலுவலர், வட்டா ட்சியர் மீது சட்டபூர்வமான நட வடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதியையும், மக்களையும் மரியாதை குறைவாகவும், அவமா னப்படுத்தும் கிராம நிர்வாக  அலுவலர் மீதும் அதை  கண்டுகொள்ளத வட்டாட்சி யர் மீதும் நடவடிக்கை எடு க்க வேண்டும் என்ற கோரி க்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று தளுகை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு முற்று கை போராட்டம் நடை பெற்றது.  போராட்டத்தில் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செய ற்குழு உறுப்பினர் பழ னிசாமி,  சிபிஎம் உப்புலி யபுரம் ஒன்றியச் செயலாளர்  முத்துக்குமார் மற்றும் தளு கை கிளை செயலாளர்கள் கிளை உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளி அமை ப்பின் ஒன்றிய நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.