தரங்கம்பாடி, மே 21- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்டத் துணைச் செயலாளர் பவுல்சத்யராஜ் தலைமையில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம்எடுத்துக்கட்டி கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கிராமங்களில் நிலவும் கடுமையானகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண் டும். டெல்டா பகுதியை சீரழிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் சிங்காரவேலன், வட்டச் செயலாளர் மார்க்ஸ், வட்டத் தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.