tamilnadu

img

திருப்பூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதி கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக. 3 – திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத் துவமனையில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் சாலையிலுள்ள மாவட்ட அரசுத்  தலைமை மருத்துவமனை முன்பாக திங்க ளன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பா.ஞானசேகர் தலைமை வகித் தார். இதில் மாவட்டச் செயலாளர் செ.மணி கண்டன் உள்பட வாலிபர் சங்கத்தினர் தனிமனித இடைவெளியுடன் பங்கேற்று  மாவட்ட மற்றும் சுகாதாரத் துறையின் அலட்சியப் போக்கை எதிர்த்து முழக்கமிட்ட னர். இந்த போராட்டம் குறித்து வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் கூறு கையில், திருப்பூர் மாவட்ட தலைமை மருத்து வமனையில் உள்ள ரத்த வங்கியில் குளிர்சா தன வசதி, பேண்டேஜ் போன்ற உபகரணங் கள் இல்லை. உடனடியாக அதை சரி செயய்  வேண்டும்.

கொரோனா தொற்றினால் பாதிக் கப்பட்டு இறந்தவர்களின் சடலங்களை பிணவறையில், மற்ற காரணங்களால் உயிரிழந்தோர் சடலங்களுடன் ஒன்றாக வைக்காமல், தனியாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொது நோயாளிகள் பலர்  மருத்துவமனைக்கு பல்வேறு சிகிச்சைக்காக  வரும் நிலையில் சானிடைசர் உள்ளிட்ட சுகா தார வசதியை ஏற்பாடு செய்வதுடன், தனிம னித இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.  கொரோனா தொற்றுப் பரிசோதனை செய் வதை அதிகரிப்பதுடன், மாவட்டம் முழு வதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்க ளிலும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்டத்  தலைமை மருத்துவமனையில் தூய்மையான  குடிநீர், சுகாதாரமான கழிப்பிட வசதியை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வா கத்தைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்த னர்.