சீர்காழி, ஏப்.29-கொள்ளிடம் அருகே குத்தவக்கரையில் குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை தினந்தோறும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் கொட்டி வருவதால். ஆற்றங்கரை சாலையின் மேல் பகுதியிலிருந்து கரையின் உள்பகுதி வரை குப்பை குவியலாகவே காணப்படுகிறது. மக்கும் குப்பைகளும் மக்காத பிளாஸ்டிக் போன்ற பொருட்களும் கோழி இறைச்சி கழிவுகளும் ஒரே இடத்தில் குவியலாகக் கிடப்பதால் சுற்றுப்புறச் சூழலை பாதிக்கிறது. காற்று வேகமாக வீசும் பொழுது குப்பைகள் காற்றில் பறந்து மீண்டும் குடியிருப்புகளுக்கு வந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இந்த குப்பைகளை சேகரிக்க குப்பைத் தொட்டி அமைத்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.