இணையதள வணிக நிறுவனமான அமேசான், பிலிப்கார்ட் நிறுவனங்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துகொள்ளவேண்டுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் சில ஆயிரம் பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கரண்டி, பை போன்ற பொருட்கள் மண்ணில் புதைந்து சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்கின்றன. இதன் காரணமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்குமாறு அமேசான், பிலிப்கார்ட் போன்ற இணையதள வணிக நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தவுள்ளது.