tamilnadu

img

7 பேரை விடுதலை செய்க!

திருச்சிராப்பள்ளி, மே 21-ராஜீவ்காந்தி வழக்கில் கைதாகி கடந்த 27 ஆண்டு காலமாக சிறையில் வாடும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆளுநருக்கு அஞ் சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெறுகிறது.இதன் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில் மணப பாறை தபால் நிலையத்தில் இருந்து ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் பாலு தலைமை வகித்தார். வட்டத்தலைவர் இளையராஜா, வட்டப் பொருளாளர் இளையராஜா, வட்டதுணைச் செயலாளர்கள் மாசிலாமணி, முருகேசன், முன்னாள் வட்டச்செயலாளர் கண்ணன், சங்க முன் னாள் உறுப்பினர்கள் ஷாஜகான், துளசிவேல், வாலிபர் சங்க உறுப்பினர்கள் விக்கி, பிரபு, வி.தொ.ச மாவட்ட குழுஉறுப்பினர் பத்மினி ஆகியோர் கலந்துகொண்டனர்.