திருச்சிராப்பள்ளி, ஜன.20- மோடி அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்து கடந்த 8-ந் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதில் திருச்சியில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் மாநகராட்சி காந்தி மார்க்கெட் பகுதி யில் பணிபுரியும் சுய உதவிக்குழு துப்புரவு தொழிலாளர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். இவர்களை பழிவாங்கும் எண்ணத்துடன் அரிய மங்கலம் கோட்ட உதவி ஆணையர் மற்றும் சுகாதார ஆய்வாளர், ஸ்ரீரங்கம் கோட்ட சுகாதார ஆய்வா ளர் ஆகியோர் திட்டமிட்டு 20 தொழி லாளர்களையும் வேலை நீக்கம் செய்தனர். இதனை கண்டித்தும், வேலை நீக்கம் செய்யப்பட்ட துப்புரவு தொழி லாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி துப்புரவு தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் இளைய ராஜா தலைமையில் கடந்த 9 ந் தேதி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் உள்ளி ருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் 10-ந் தேதி காந்தி மார்க்கெட் தர்பார் மேடு உள்ளே தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டனர். 11-ந் தேதி காந்தி மார்க் கெட் மணிக்கூண்டு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கிழக்கு தாசில்தார் தலைமையில் நடை பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது. இதையடுத்து இதுகுறித்து கடந்த 13-ந் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக் கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் எவ்வித தீர்வும் காணப்படவில்லை. எனவே பழிவாங்கும் நோக்கத் தோடு வேலை நீக்கம் செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கும் வரை ஞாயிற்று கிழமை முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெ றும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி துப்புரவு தொழிலா ளர்கள் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில் திங்க ளன்று அரியமங்கலம் கோட்ட அலு வலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் துப்புரவு தொழிலா ளர்கள் ஈடுபட்டனர். போராட்டத்தை விளக்கி துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன், மார்க்சிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிக்குழு செயலாளர் கார்த்தி கேயன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஜெயபால், விஜயேந்திரன், மாவட்ட பொருளாளர் விஜயன் ஆகி யோர் பேசினர். சங்க நிர்வாகிகள் ராமசாமி, ரவி, சாந்தி, வளர்மதி, முத்துலெட்சுமி, மாரியப்பன், கவிதா, சுகன்யா உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.