சென்னை, ஏப். 5 - உடல் நலம் குன்றிய தொழிலாளர்க ளுக்கு மாற்றுப்பணி கேட்டு மாநகர போக்கு வரத்து மேலாண் இயக்குநர் அலுவலகத்தில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் நடத்துநர்களில் 100க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகை யவர்களை பரிசோதித்து மாற்று பணி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பணி வழங்கப்பட்டவர்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பணி மறுக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலர் 5 மாதங்களாக பணியின்றி, ஊதியமின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட தொழி லாளர்கள் சிலர் தங்களது குடும்பத்துடன் புதனன்று (ஏப்.5) மேலாண் இயக்குநர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு மேலாண் இயக்குநர் இல்லாததால் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.துரை, பொதுச்செயலாளர் வி.தயானந்தம் ஆகியோர் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் துணைத் தலைவர் எம்.சந்திரன், பணியின் போது பல்வேறு உடல் உபாதைகள் தொழிலாளர்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக, கை காலில் அடிப்படுகிறது; மனநலம் சிலருக்கு பாதிக்கப்படுகிறது; வலிப்புக்கு உள்ளா கின்றனர். இத்தகைய ஊழியர்களுக்கு சட்டப்படி மாற்றுப் பணி வழங்க வேண்டும். இதனை மனிதாபிமானம் மற்றும் சட்ட அடிப்படையில் செயல்படுத்த கோருகிறோம் என்றார். இதனையடுத்து சங்கத் தலைவர்களை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மேலாண் இயக்குநர் அன்பு ஆபிர காம் பேசினார். சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிட்டிருந்த 15 பேருக்கும் மாற்றுப்பணி வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதனையடுத்து பிற்பகலில் காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.