பாபநாசம், டிச.29- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்த லம் அருகே திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு 30-ஆவது நாளை கடந்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயி கள் பெயரில் முறைகேடாக ரூ.300 கோடி வங்கி கடன் பெற்றது. மேலும் விவசாயி களுக்கு தர வேண்டிய நிலு வைத் தொகையையும் வழங்கவில்லை. இதைக் கண்டித்து கரும்பு விவ சாயிகள் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு நவம்பர் 30 அன்று முதல் தொடர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலையில், காத்தி ருப்பு போராட்டம் 30-ஆவது நாளான வியாழனன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு முருகேசன் தலைமை வகித் தார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலை வர் செந்தில்குமார், மாவட் டப் பொருளாளர் பழனி ஐயா உள்ளிட்டோர் பங்கேற்ற னர். மேலும் விவசாயி களின் காத்திருப்பு போராட் டத்திற்காக மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடை யை திறந்ததை கண்டித்தும், மதுபான கடையை மூட வலியுறுத்தியும் முழக்கங் கள் எழுப்பப்பட்டன.