tamilnadu

img

போலி ஆவணம் மூலம் ரூ.4.75 கோடி மோசடி - பாஜக நிர்வாகி கைது!

திருச்சி,நவம்பர்.22- போலி ஆவணம் தயாரித்து ரூ.4.75 கோடி செய்த வழக்கில் பாஜக தமிழ்நாடு மாநில நிர்வாகி மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக விவசாயி அணி மாநில துணைத் தலைவர் கோவிந்தன் என்பவர் திருச்சியில் குத்தகைக்கு விடப்பட்ட 17 ஏக்கர் நிலத்தை நில உரிமையாளர் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, இடம் விற்பனைக்கு உள்ளதாகக் கூறி தேவராஜன் என்பவரிடமிருந்து முன்பணமாக 4.75 கோடி பெற்றுள்ளார்.
இந்த வழக்கில் பாஜக விவசாயி அணி மாநில துணைத் தலைவர் கோவிந்தன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை காவல்துறை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.