tamilnadu

img

மாணவர்கள் மோதல் தொடர்பான வழக்கு விவரங்களை தாக்கல் செய்க!

மாணவர்கள் மோதல் தொடர்பான  வழக்கு விவரங்களை தாக்கல் செய்க!  காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை,நவ.22- மாணவர்களிடையே நிகழ்ந்த மோதல் தொடர்பான வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்  என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணி யைச் சேர்ந்த மாணவர் சுந்தர்,  சென்னை சென்ட்ரல்  ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர் களால் சரமாரியாக தாக்கப்பட்டு, உயிரிழந்தார்.  இதில் பச்சை யப்பன் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட வர்களில் சந்துரு என்பவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்திய மாணவர் சங்கம் மற்றும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு  இடையேயான ஒற்றுமை குறித்தான வழிகாட்டு நெறிமுறை களை வழங்கினர். காவல்துறை தரப்பில், வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக மாணவர்கள் மீது 22 வழக்குகள் பல்வேறு காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் அதிகப்படியான மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டு வேலை செய்து படிக்க அனுப்பும் நிலையில், கல்லூரிக்குகூட செல்லாமல் அடிதடியில் ஈடுபடுவதாக வேதனையுடன் தெரிவித்தார். இதையடுத்து, உயர்கல்வி துறை செயலாளரை வழக்கில் இணைத்து உத்தரவிட்ட நீதிபதி, மாணவர்களுக்கு இடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் ரயில்வே போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.