தஞ்சை மாவட்டம் ஆதனூர் கிராமத்தில் வருவாய்த்துறை முகாம் நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ரமேஷ் தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் கிள்ளி வளவன், கிராம நிர்வாக அலுவலர் தாமரைச்செல்வன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் என்.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதியோர் உதவிதொகை உள்ளிட்ட கோரி மனுக்கள் கொடுக்கப்பட்டன. கிராம உதவியாளர் சுரேஷ் நன்றி கூறினார்.