தஞ்சாவூர், ஜூன் 24- குடிநீர் வழங்கல் பணிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். தஞ்சாவூர், ஒரத்த நாடு ஒன்றியங்களை பொதுமக்கள் நலன் கருதி இரண்டாக பிரிக்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் ஆறாவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவர் இராசன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சுப்ரமணியன், துணைத் தலைவர் எஸ்.புஷ்பநாதன், மாவட்டச் செய லாளர் கை.கோவிந்தராஜன், பொருளாளர் உ. ராகவன், இணைச் செயலாளர் என்.தேசிங்கு ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். கூட்டத்தில், ‘பொதுமக்கள் நலன் கருதி யும் திட்டப் பணிகளை திறம்பட செயலாற்ற உதவும் உதவும் வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சை, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாக பிரிக்கவும், கும்ப கோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதியில் இருந்து கூடுதலாக ஒரு ஒன்றியத்தை உருவாக்கவும், 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை இரண்டாகப் பிரிக்க வும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் குடிநீர் வழங்கல் பணிகளுக்கு அவசர, அவசியத் தேவைகளை கருத்தில் கொண்டு ஊராட்சி களுக்கும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.