திருச்சிராப்பள்ளி, ஜூன் 17- அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்க திருச்சி மாவட்ட 5வது மாநாடு திங்களன்று நடைபெற்றது. மாநாட்டில் தேசியக் கொடியை கிளைத் தலைவர் ஸ்ரீகுமார், சங்க கொடியை மாநில செயலாளர் நரசிம்மன் ஆகி யோர் ஏற்றினர். மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை கிளைத் தலைவர் நாகராஜன் வாசித்தார். மாநில செயலாளர் நர சிம்மன், பொருளாளர் நாகராஜன், மாநில அமைப்பு செயலாளர் சின்னை யன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். பிஎஸ்என்எல்இயு மாவட்ட செய லாளர் அஸ்லாம்பாஷா, மாவட்ட தலை வர் தேவராஜன், டிஎன்டிசிடபுள்யு மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன், அஞ் சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சிவசுப்ரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் பால கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில், பிஎஸ்என்எல் நிறு வனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கனை நிரந்தரப் படுத்த வேண்டும். மாதம் சம்பளத்தை உறுதிப்படுத்த வேண்டும். பிஎஸ் என்எல் நிறுவனத்தை தொடர்ந்து பொதுத் துறையாக இருக்க மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தீர்மானங்களை மாவட்ட துணை செயலாளர் சுப்ரமணியன் முன் மொழிந்து பேசினார். மாநாட்டில் புதிய தலைவராக பி.கிருஷ்ணன், செயலாளராக ஐ.ஜான் பாட்சா, பொருளாளராக பி.நாகராஜன், துணைத் தலைவர்களாக பி.குமர வேல், கே.நாகராஜன், ஆர்.பஞ்ச லிங்கம், துணை செயலாளர்களாக கே. சின்னையன், கே.தியாகராஜன், எஸ். சுப்பிரமணியன், துணை பொருளாள ராக பி.ஆறுமுகம், அமைப்பு செய லாளர்களாக கே.நடராஜன், ஓ.பழனி வேலு, கே.நாகராஜன், கலையரசன், ஏ.நாராயணசாமி, ஜி.மனோகரன், கே. விஜயலெட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூ தியர் சங்க திருச்சி மாவட்ட செயலா ளர் ஜான்பாஷா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றி கூறி னார்.