tamilnadu

img

பிஎஸ்என்எல் ஊழியர்களை கட்டாயப் பணி ஓய்வு செய்யும் திட்டத்தை கைவிடக் கோரிக்கை

கரூர், நவ.17- அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூ தியர் சங்க மாநில அளவிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்டக்குழு அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் சி.கே. நரசிம்மன் தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர் ஐ.ஜான்பாஷா வரவேற்று பேசி னார். சிஐடியு சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.  தமிழ்நாடு கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பொன்ஜெயராம், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் மகாவிஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க அகில இந்திய அமைப்பு செயலா ளர் எஸ்.மோகன்தாஸ் சிறப்புரை யாற்றினார். மாநில செயலாளர் குப்பு சாமி எதிர்காலப் பணிகள் குறித்து பேசி னார். மாநில பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களை கட்டாய பணி ஓய்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதை ஓய்வூதியர் சங் கம் கண்டிப்பதுடன், அத்திட்டத்தை உட னடியாக கைவிட வேண்டும். ஜனவரி 8-ம் தேதி நடைபெற உள்ள நாடு தழு விய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதி யர் சங்கம் முழுமையாக ஆதரவு அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.