தரங்கம்பாடி, ஏப்.4-நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருவிளையாட்டம் ஊராட்சிக்குட்பட்ட கிராமமான தத்தனூர் பகுதியையும் நெடுவாசல் கிராமத்தையும் இணைக்கக் கூடிய சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென இரு கிராமங்களை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து செல்லக் கூட முடியாத நிலையில் குண்டும், குழியுமாக மிக மோசமாக உள்ளது. இச்சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.