திருச்சிராப்பள்ளி, ஜூன் 8- மார்க்சிஸ்ட் கட்சியின் அபிஷேக புரம் பகுதிக்குழு சார்பில் இடைக் கமிட்டி செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட ஆட்சியரின் உதவியாள ரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்த தாவது: திருச்சி மாநகராட்சி எட மலைப்பட்டிபுதூர் பகுதியில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கோரையாற்றில் சாக்கடை நீர் மற்றும் கழிவுநீர் தொடர்ந்து கலந்து பின்பு காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் பொதுமக்கள், விவசாயி கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நிலத்தடி நீர், கிணறுகள், ஊரணி, குளம் ஆகியவை மாசடைந்து சுற்றுச் சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், பலமுறை மனுக் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்பகுதியை ஆய்வு செய்து சாக்கடை, கழிவுநீர் கலப்பதையும், கோரையாறு கரை மாசடைவதையும் தடுத்து நிறுத்தி, தூர்வாரி சுத்தப் படுத்திட வேண்டும். மேலும் புதுக்கோட்டை– மதுரை இணைப்பு சாலையில் செட்டியப்பட்டி, பஞ்சப்பூர் அருகில் உள்ள புதுப் பாலங்களை அகலமாகவும். உயரமா கவும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கே.கே.நகரில் இருந்து பஞ் சப்பூர் பைபாஸ் நெடுஞ்சாலையில் வடி கால் வசதி அமைத்திடவும், சாலை வசதி செய்து தர ஆவன செய்ய வேண்டும் என அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். ஆட்சியரின் உதவி யாளரிடம் மனுவை கொடுத்த போது பகுதிக்குழு லெனின், கணேசன், சதாசிவம், ரவி, ஸ்டீபன் பால்ராஜ், சரவணன், சின்னையன், பழனி ஆகியோர் உடனிருந்தனர்.