சென்னை, மார்ச் 4 - எழும்பூர் ரயில் நிலையம் எதிரே இருந்த சாலையோர கடைகளை அகற்றிய அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. எழும்பூர் ரயில் நிலையம் எதிரில் சாலையோரத்தில் சுமார் பழம், பூ, ரெடிமேட் ஆடை போன்றவற்றை 40 வியா பாரிகள் விற்று வந்தனர். மாநகராட்சியியிடம் இருந்து பெற்ற சாலையோர வியாபாரிகள் என்பதற்கான அடையாள அட்டையும் வைத்துள்ளனர். இந்நிலையில், 61 வார்டு மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மலர்விழி, எழும்பூர் காவல் ஆய்வாளர் திருமால் ஆகி யோர் மார்ச் 2 அன்று முன்னறிவிப்பு இன்றி கடைகளை புல்டோசர் மூலம் கடை களை நொறுக்கி பொருட்களை அள்ளி சென்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரி வித்த வியாபாரிகள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து சனிக்கிழமையன்று (மார்ச் 4) எழும்பூர் ரயில் நிலையம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அராஜ கத்தில் ஈடுபட்ட அதிகாரிகளை தற்காலிக நீக்கம் செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கீகாரம் பெற்று வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளை, மீண்டும் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும், பறிமுதல் செய்த பொருட்களை திருப்பித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சென்னை மாநகர் சிறுகடை வியா பாரிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செய லாளர் எம்.வி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.