திருச்சிராப்பள்ளி, மே 27-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மின்சார திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் குருநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி அகில இந்திய தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், விவசாய சங்க மாநில துணைத் தலைவர் முகமது அலி மற்றும் நிர்வாகிகள் பேசினர். விதொச மாநிலக்குழு உறுப்பினர் தெய்வநீதி, மாநகர் மாவட்டப் பொருளாளர் தனபால் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர். மணப்பாறையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மணிகண்டம் ஒன்றிய அலுவலகம் முன்பு வி.ச.மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.சி.பாண்டியன், சிபிஎம் மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் சங்கர், விதொச மாவட்டச் செயலாளர் தங்கதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டத் தலைவர் சங்கிலிமுத்து நன்றி கூறினார்.
கைகாட்டி
கைகாட்டி அருகே சிபிஎம் ஒன்றிய செயலாளர் தியாகராஜன், சிபிஐ ஒன்றிய செயலாளர் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி அழகர்சாமி பாலு ஆகியோர் பேசினார். மருங்காபுரி ஐஓபி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சாமி. நடராஜன் விளக்க உரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் பூதலூர் நான்கு ரோட்டில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருக்காட்டுப்பள்ளி
பூதலூர் வடக்கு ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளி, காந்தி சிலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் பி.முருகேசன் தலைமை வகித்தார். சிபிஎம் பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி கண்டன உரையாற்றினார்.
ஒரத்தநாடு
ஒரத்தநாடு தாலுகா அலுவலகம் முன்பு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.சுரேஷ்குமார், சிபிஐ ஒன்றியச் செயலாளர் சீனி.முருகையன், மதிமுக ஒன்றியச் செயலாளர் வி.சட்டநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஏ.கோவிந்தசாமி (சிபிஎம்), விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கலியபெருமாள் (சிபிஐ) ஆகியோர் தலைமை வகித்தனர். விதொச மாவட்டத் தலைவர் சி.பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி
பேராவூரணி பெரியார் சிலை அருகில் சிபிஎம் பேராவூரணி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்மாபேட்டை ஒன்றியம் கோவிலூர் கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.முனியாண்டி தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் எஸ்.வி.கருப்பையன் கலந்து கொண்டனர்.
திருவோணம்
திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரம் கடைவீதியில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.கோவிந்தராஜ், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், சிபிஎம் நகரச் செயலாளர் பாலசங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போலீசார் அனைவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
பாபநாசம்
பாபநாசத்தில் வி.முரளிதரன், சாமு.தர்மராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் தில்லைவனம், வி.ச.மாவட்ட துணைச் செயலாளர் பி.எம்.காதர்உசேன், மாவட்டக் குழு உறுப்பினர் கஸ்தூரி, மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் மாலதி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவிடைமருதூர் கடைவீதியில் விவசாய சங்க பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் பக்கிரிசாமி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய சிபிஎம் செயலாளர் சா.ஜீவபாரதி, ஒன்றிய குழு உறுப்பினர் ம.சங்கர், ஆர்.சேகர் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
திருப்பனந்தாள்
திருப்பனந்தாள் கடைவீதியில் டி.ஜி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் சாமிகண்ணு பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் ஒன்றியம்
தேவனாஞ்சேரி கடைவீதியில் வி.ச. மாவட்ட துணை செயலாளர் என்.கணேசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சி.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாச்சியார்கோவில்
திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய விவசாய சங்கங்கள் சார்பில் நாச்சியார்கோவில் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வி.ச. ஒன்றியத் தலைவர் டி.என். ஆறுமுகம் தலைமை வகித்தார்.
திருவாரூர்
திருவாரூரில் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர்கள் பி.எச்.மாசிலாமணி (சிபிஐ), ஜி.பவுன்ராஜ் (சிபிஎம்) ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.கலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி
மன்னார்குடியில் பெரியார் சிலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ், சிபிஎம் மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் எம். திருஞானம் தலைமை வகித்தனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஐ சார்பில் ஜி.பழனிச்சாமி, சிபிஎம் சார்பில் விவசாய சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தனர். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடவாசல்
குடவாசல் வி.சி. பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடவாசல் ஒன்றியச் செயலாளர் டி.ஜி.சேகர் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.லட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, வி.ச. ஒன்றிய பொருளாளர் என்.துரைமணி கலந்து கொண்டனர்.
வலங்கைமான்
வலங்கைமான் கடைவீதியில் வி.ச. கே.சுப்பிரமணியன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் எம்.கலியபெருமாள் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.ராதா மற்றும் வி.ச. ஒன்றியத் தலைவர் டி.சண்முகம், வி.தொ.ச செயலாளர் என்.பாலையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொரடாச்சேரி
கொரடாச்சேரி ஒன்றியம் வெட்டாறு பாலத்தில் தமிழ்நாடு விவாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி தலைமை வகித்தார். நீடாமங்கலம் ஒன்றியத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் தலைமை வகித்தார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சி.சோமையா, அறந்தாங்கியில் மேகவர்ணம், அன்னவாசலில் விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.சி.ரெங்கசாமி, குன்றாண்டார்கோவிலில் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பீமராஜ், திருமயத்தில் வீரமணி, அரிமளத்தில் எம்.அடைக்கப்பன், ஆவுடையார்கோலில் மாவட்டப் பொருளாளர் சி.சுப்பிரமணியன், பொன்னமராவதியில் பி.ராமசாமி, விராலிமலையில் சா.தோ.அருணோதயன், மணமேல்குடியில் கரு.ராமநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி தலைமை வகித்தார். கந்தர்வக்கோட்டையில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.ராமையன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர், அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர்கள் எஸ்.ராஜேந்திரன், உ.அரசப்பன், வி.மு.வளத்தான், க.ஜோதிவேல், க.சித்திரவேல், க.சக்திவடிவேல் உள்ளிட்டோர் பேசினர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி பேருந்து நிலையம் உள்புறம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான தொழிற்சங்க பொறுப்பாளர் சிங்காரம் தலைமை வகித்தார். பேருந்து நிலையத்திற்கு வெளியே வாலிபர் சங்க பொறுப்பாளர் குமார் தலைமை வகித்தார். திருக்களம்பூரில் வி.தொ.சா ஒன்றிய தலைவர் சாத்தையா தலைமை வகித்தார். காரையூரில் வி.ச. ஒன்றியத் தலைவர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். அரசமலையில் வி.தொ.ச ஒன்றிய செயலாளர் பிச்சை தலைமை வகித்தார். உடையாம்பட்டியில் வி.ச. ஒன்றியச் செயலாளர் பி.ராமசாமி தலைமை வைத்தார்.