திருச்சிராப்பள்ளி, ஆக.8- கொரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்தி, பொது த்துறையை, இயற்கை வளங்களை சூறையாடும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து, சுதந்திர போராட்ட கால “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் தொடங்கிய நாளான ஆக.8 அன்று அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்.பி.எப், ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியூசி, ஏஐசி சிடியூ, ஹெச்எம்எஸ், மற்றும் வங்கி, இன்சூரன்ஸ், தொலைத் தொடர்பு, ரயில்வே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூ தியர்கள் சங்கங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் குணசேகரன் தலை மை வகித்தார். மணப்பாறை பேருந்து நிலையம் அருகே சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஷாஜகான், ஏஐடியு அமை ப்புசாரா தொழிலாளர் சங்க செயலாளர் நல்லுசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் தலைமைத் தபால் நிலையம் அருகே சிஐ டியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்டச் செயலா ளர்கள் எல்பிஎப் - கு.சேவியர், ஏஐடியுசி ஆர்.தில்லைவனம், ஐஎன்டியூசி மோகன்ராஜ், ஏஐசிசிடியூ ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். டிஆர்இயு தஞ்சை கோட்டச் செயலா ளர் கண்ணன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாந்தி கமலா திரையரங்கம் அருகில் தரைக்கடை வியா பாரிகள் சங்க மாவட்ட தலைவர் ஆர்.மணிமாறன் தலைமை யிலும், சிஐடியு மாவட்ட அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.வீரையன் தலைமையிலும், விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியு எஸ்.செங்குட்டுவன் தலைமையிலும், அரசு போக்குவ ரத்துக்கழக நகர் கிளை அலுவலகப் பணிமனை முன்பு ஏஐடியூசி சண்முகம் தலைமையிலும், அரசு போக்குவர த்துக்கழக தஞ்சை புறநகர் கிளையில் சிஐடியு காரல்மா ர்க்ஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி பெரியார் சிலை அருகில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஏஐடியுசி சங்க மாவட்டத் தலைவர் கே.எஸ்.முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பால சுந்தரம் உரையாற்றினார். இதேபோல், செங்கிப்பட்டி, பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, செங்கிப்பட்டி, பட்டுக்கோட்டை, திருவோணம் உள்ளிட்ட இடங்களில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம்
கும்பகோணம் போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு துணைத் தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். திரு விடைமருதூரில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜீவபா ரதி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவாரூர்
திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன் தலைமையேற்றார். சிஐடியு மா வட்ட துணைத்தலைவர் ஜி.பழனிவேல் விளக்கவுரையாற்றி னார். தலைமை தபால் நிலையம், டாஸ்மாக் மேலாளர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், அரசு போக்கு வரத்து பணிமனை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
மன்னார்குடி
மன்னார்குடி கீழப்பாலத்தில் சிஐடியு சீ.ஏகாம்பரம் தலைமையிலும், நகராட்சி முன்பு ஏஐடியுசி ஜி.ரெகு பதி தலைமையிலும், ஆர்டிஓ அலுவலகம் முன்பு சிஐ டியு ஆ.அரிகரன் தலைமையிலும், போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ஏஐடியுசி கோ.சந்திரசேகரன் தலை மையிலும், பிஎஸ்என்எல் முன்பு கே.பிச்சைக்கண்ணு தலை மையிலும் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் ரமேஷ், பழைய பேருந்து நிலையத்தில் பவுன்ராஜ், காம ராஜர் சிலையில் சிஐடியு மாவட்ட பொருளாளர் எம்.பி.கே. பாண்டியன், ரயிலடியில் ஆட்டோ சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கே.செல்வம், அண்ணா சிலையில் ராம லிங்கம், வேதை சாலையில் ஆட்டோ சங்க மாவட்ட தலை வர் ஏ.நபி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீடா மங்கலம் பெரியார் சிலை அருகில் சிஐடியு துணை செய லாளர் கு.முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
நாகப்பட்டினம்
கீழையூர் ஒன்றியம், மேலப்பிடாகையில் சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கே.தங்கமணி தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். சிபிஎம் கீழையூர் ஒன்றியச் செய லாளர் எம்.முருகையன் மற்றும் பலர் பங்கேற்றனர். நாகை ஒன்றியம், சிக்கல் கடைத் தெருவில் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சு.மணி தலைமை வகிக்க, சி.பி.எம். நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கீழ்வேளூர் ஒன்றியம் ஒக்கூரில் சேகர் தலைமை வகித்தார். நாகப்பட்டினம் அவுரித்திடலில் நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சு.சிவ குமார், அனைத்து ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி, எம்.பி.குணசேகரன், பி.முனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோல், கீழ்வேளூர், தேவூர், வலிவலம், திருப்புகலூர், தலைஞாயிறு ஒன்றியப் பகுதிகள், வேதாரணியம் ஒன்றியப் பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி
பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தீன் தலைமை வகித்தார். பொன்னமராவதி போக்குவரத்து பணிமனை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி.எப் சி.முத்தையா தலைமை வகித்தார். அறந்தாங்கி அரசு போக்குவரத்துக் கழக அலு வலகம் முன்பு அனைத்து கட்சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பா ட்டம் செய்தனர்.
கரூர்
அரவக்குறிச்சி ஒன்றிய குழு சார்பில் பள்ளப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு விதொச அரவக்குறிச்சி ஒன்றிய தலைவர் எம்.ஆறு முகம் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.வி.கணேசன், கட்டுமான சங்க மாநில துணைச் செயலாளர் சி.ஆர். ராஜாமுகமது ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். தீரன்நகர் கிளையில் எல்பிஎப் மாவட்ட செயலாளர் ரெங்க சாமி, போக்குவரத்து பணிமனை கிளையில் சிஐடியு கே.கே. குமார், சிங்கராயர், அரசு மருத்துவமனை பகுதி கிளையில் தர்மராஜ், பழைய பேருந்து நிலையம் அருகே மல்லீஸ்குமார், மார்க்கெட் கிளையில் பி.ரெங்கராஜ், அகரம்சிகூர் கிளை யில் அழகேசன், அரணாரை கிளையில் ரீகன், காந்திசிலை முன்பு செல்லதுரை ஆகியோர் தலைமை வகித்தனர்.