கொள்ளிடம், ஏப்.7-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கல்விச் சீர் வழங்கும்விழா, ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டி ஆகியமுப்பெரும் விழா நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக நடைபெற்ற கல்விச் சீர் வழங்கும் விழாவில் ஊர்ப் பொதுமக்கள்சார்பில் பள்ளிக்குத் தேவையான பொருட்கள் வழங்கப் பட்டன.தொடர்ந்து நடைபெற்ற விழாவிற்கு வட்டார கல்விஅலுவலர் கோபு தலைமை வகித்தார். தலைமையாசிரியர் கண்ணன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் செல்வம்முன்னிலை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ராமலிங்கம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.விளையாட்டு குழுவினர்கள் ராமகிருஷ்ணன், ராஜா, தலைமையாசிரியர்கள் தங்கசேகர், சிற்றரசன், மணிவண்ணன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.