மன்னார்குடி, நவ.18- அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதன் மூலம் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலையை கொடுக்க வேண்டும் உள்ளிட்டவைகளை அரசு ஊழியர் சங்கத் தலை வர்கள் திருவாரூர் மாவட்டத்தின் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் போது பிரச்சாரம் செய்தனர். மாவட்டச் செயலாளர் வெ.சோமசுந்தரம் ஒருங்கிணைப்பில் வலங்கை மானில் துவங்கி குடவாசல், நன்னிலம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் ஆகிய வட்டங்களில் 10 முனைகளில் நடைபெற்ற பிரச்சார இயக்கம் மன்னார்குடி பந்தலடியில் நிறைவடைந்தது. மாநில துணைத் தலைவர் எம்.ஞானத்தம்பி, மாநிலச் செயலாளர் யு.சண்முகம், மாவட்டத் தலைவர் எம்.ராஜமாணிக்கம், பொருளாளர் சி.பிரகாஷ், மாவட்ட துணை இணை பொறுப்பாளர்கள் எஸ்.சுதாகர், டி.மணிவண்ணன், ஏ.தனபால் வி.சி.குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீடாமங்கலத்தில் பெரியார் சிலை முன்பு நடைபெற்ற பிரச்சாரத்தில் வட்டத் தலைவர் கே.சின்னையன், செயலாளர் எஸ்.ஆறுமுகம், வி.ஜி. மணி கண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மன்னார்குடியில் நடை பெற்ற பிரச்சாரத்தில் வட்டத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன். செயலாளர் ரா.செந்தில்ராஜன், பொருளாளர் எம்.சுரேஷ், துணைத்தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நீடாமங்கலம் மன்னார்குடியில் நடைபெற்ற பிரச்சாரங்களில் மாநில செயலாளர் யு.சண்முகம் மற்றும் மாநில துணைத் தலைவர் எம்.ஞானத்தம்பி ஆகியோர் உரையாற்றினர். மாவட்டத்தில் பதினோரு முனைகளில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.