tamilnadu

img

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்குக!

திருச்சிராப்பள்ளி, மே 13- மார்க்சிஸ்ட் கட்சியின் திருவெறும்பூர் ஒன்றியக்குழு சார்பில் ஒன்றியச் செயலாளர் நடராஜன் திருவெறும்பூர் வட்டாட்சியர் ஞானஅமிர்தத்திடம் அளித்த கோரிக்கை மனுவில், ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்து வாடும் மக்களுக்கு, குடும்பத்திற்கு ரூ 7500 தமிழக அரசு வழங்க வேண்டும்.  அரசு அறிவித்தபடி கட்டுமானம், முறை சாரா, ஆட்டோ போன்ற வாரியங்களால் பதிவு செய்தவர்களுக்கு இதுவரை நிவாரணம்  கிடைக்கவில்லை. எனவே நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்து உடனே நிவாரணம் வழங்க வேண்டும்.  ரேசன் கடைகள் மூலம் கோதுமை, மண்ணெண் ணெய் 3 லிட்டர் வழங்க வேண்டும். ஊரடங்கில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதி ஏழை, எளிய மக்களுக்கும் வங்கிகள் மூலம் ரூ.25,000 வட்டியில்லா கடன் வழங்கி அதை மாதம் மாதம் தவணையாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர் சிவராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் முருகேசன், தெய்வ நீதி, ரவிக்குமார், குருநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.