முசிறி, ஜூலை 15- முசிறி தாலுகா பெரிய கொடுந்துறை கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தி முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பெரிய கொடுந்துறை கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து அப்பகுதி பொது மக்கள் ஒன்றிய அலுவ லர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை என கூறப்ப டுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகை யிட்டு போராட்டம் செய்த னர். தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்குமாறும், ஊராட்சி களில் அடிப்படை சுகாதார வசதிகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் வலி யுறுத்தினர். இக்கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்ப தாக ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வா கிகள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் உள்பட திர ளானோர் பங்கேற்றனர்.