தஞ்சாவூர், ஜூலை 9- தஞ்சாவூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13-ம் தேதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மன்னர் சரபோஜி கல்லூரியில் நடைபெறுகிறது. 18 முதல் 35 வயது வரை உள்ள வேலை தேடுவோர், உரிய ஆவணங்களுடன் வர வேண்டும். முகாமில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு விபரம் அறிய, பதிவு செய்ய அரங்கு வசதி, இளைஞர்களுக்கு தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு பதிவு செய்யும் வசதி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, புதுப்பித்தல், சிறப்பு புதுப்பித்தல் மற்றும் கூடுதல் பதிவு பணிகள் வசதியும் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள், 5000-க்கும் மேற்பட்ட நபர்களை பணிக்கு தேர்வு செய்ய உள்ளன எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.