பெரம்பலூர், மார்ச் 11- தனியார்துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலைவாய்ப்பு முகாம்” பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இவ்வாரத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 13 அன்று நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் தங்க ளுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிக ளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்வார்கள். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. சென்னையில் உள்ள பிரபல தனியார்துறை நிறுவன மான அப்பலோ ஹோஃம் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவ னத்திற்கு டிஜிஎன்எம் (டிப்ளமோ ஜெனரல் நர்சிங் அன்டு மிட்வெஃப்) படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கலந்துகொள்ளலாம்.