முசிறி, ஜூலை 15- தொட்டியம் அருகே குளத்துப்பாளையத்தில் தனியார் பால் கம்பெனி கழிவுகளை வாய்க்காலில் விடு வதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் காட்டுப்புத்தூர் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலு கா காட்டுப்புத்தூர் அருகே குளத்துப்பா ளையத்தில் தனியார் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பாசன வாய்க்காலில் கொ ட்டப்படுவதால் சாகுபடி செய்யும் பயிர்க ளும், தென்னை மரங்களும், காய்ந்து போவதாக இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். வாய்க்காலில் கழிவு நீரை ஊற்ற வந்த டிராக்டரை மடக்கி பிடித்த விவ சாயிகள் காட்டுப்புத்தூர் காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர். விவசாய நிலங்களை பாதிக்கும் வகை யில் செயல்படும் பால் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் நிறுவன கழிவுகள் பாசன பகுதிகளில் ஊற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும். உரிய அங்கீ காரத்தோடு பால் நிறுவனம் இயங்குகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென கூறி காவல் நிலை யத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போரா ட்டம் நடத்தினர்.