தரங்கம்பாடி, ஜன.16- நாகை மாவட்டம், பொறையார் அருகேயுள்ள காழியப்பநல்லூர் கிரா மத்தில் கடந்த 40 ஆண்டுக ளுக்கும் மேலாக குடும்ப அட்டை, வாக்குரிமை, கல்வி உரிமை, வசிக்க இருப்பிடம் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்ப டை வசதிகளுமின்றி தவிக்கும் வேடர் சமூக மக்க ளுக்கு பொங்கல் தினத்தை யொட்டி சமூக சேவகரும், முன்னாள் மாவட்ட கவுன்சி லருமான மாயா வெங்கடே சன் 20 குடும்பங்களுக்கும் தரமான பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பரிசு தொ குப்பினை அனைத்து குடும் பத்தினருக்கும் நேரில் சென்று வழங்கினார். தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு கூட பெற தகுதியின்றி புறக்கணிக்கப் பட்டு வசிக்கும் தங்களுக்கு அடிப்படையான ஒரு வசதி களுமின்றி அன்றாட உணவே கேள்விக்குறியாக உள்ள தாக கண்ணீர் மல்க அவர்கள் கூறினர். தொடர்ந்து சங்கரன் பந்தல், திருவிளை யாட்டம் (அரும்பாக்கம்) பகுதிகளில் வீரசோழன் ஆற்றங்கரை யில் வசித்து வரும் குறவர் சமூகத்தை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்க ளுக்கும் மாயா வெங்கடே சன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் மாணவர்களுக்கு எழுது பொருட்களையும் வழங்கி அவர்களிடம் உரை யாடினார். சமூக ஆர்வலர் மகாகிருஷ்ணன் மற்றும் இளைஞர்கள் உடனி ருந்தனர்.