தஞ்சாவூர் ஜூன்.16- தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஆதனூர் கருப்பமனை கிராமத்தில் உள்ள வீமநாயகி அம்மன் கோயில் வைகாசி விழா விடையாற்றியுடன் நிறைவுற்றது. 12 நாட்கள் நடைபெற்ற விழாவில் வெள்ளிக்கிழமை விடையாற்றி நிகழ்ச்சியை மகாத்மா காந்திஜி நற்பணி மன்ற தலைவர் வேத.குஞ்சருளன் மரக்கன்றுகள் நடும் விழாவாக நடத்தினார். விழாவிற்கு பேராவூரணி நீலகண்டப்பிள்ளையார் கோயில் நிர்வாக அலுவலர் சிதம்பரம் தலைமை வகித்தார். கிராம தலைவர் ஐ.மான்சிங்,செயலாளர் ஜா.பிரட்ரிக், பொருளாளர் சி.சக்கரியாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில் பணியாளர்கள் கணபதி, குமரன், கிராம பொறுப்பாளர் ஆர்.ஏ.ராஜா, எஸ்.மரியசவரிநாதன் உள்ளிட்டோர் மரக் கன்றுகளை நட்டனர்.