tamilnadu

குடிநீர் வழங்கக் கோரி உப்பிலியாபுரம் மக்கள் மறியல்

திருச்சிராப்பள்ளி, மே,26-திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியாபுரம் பேரூராட்சி 3வது வார்டில் கடந்த 1 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்தும், இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் அப்பகுதி பொதுமக்கள் துறையூர்- ஆத்தூர் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த உப்பிலியாபுரம் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.