கரூர், ஜூன் 29- கரூர் மாவட்டம் கிருஷ்ண ராயபுரம் தாலுகா சேங்கல் பகுதியில் கடந்த ஒரு மாத மாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் குடிநீர் இன்றி பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் சேங்கல் ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவ டிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளி யன்று சேங்கல் கடைவீதி பகுதியில் காலிக் குடங்களு டன் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாயனூர் காவல்துறையினர் பொதுமக்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.