மன்னார்குடி செப்16- இலவச குடிமனை பட்டா மற்றும் குடியிருக்க வீடு நூறு நாள் வேலை நாளில் கொடுக்கப்படும் சம்பளத்தை முழுமையாக கொடுக்க வேண்டும், 100 நாள் வேலையை அதிகப்படுத்தி 150 நாட்களாக அதிகப்படுத்தி அதை தொடர்ச்சியாக வேலையை கொடுக்க வேண்டும் வேலை பார்த்து கொடுக்கப்படாது உள்ள நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். ரேஷனில் கொடு்க்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அரிசி போன்ற அத்தியா வசிய பொருட்கள் அளவு குறைக்க ப்பட்டுள்ளது. இதை குறைவின்றி இனி கொடுக்க வேண்டும் உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து சேதமடைந்த சாலைகளை செப்பனிட்டு புதுப்பித்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உதயமார்ததாண்டபுரம் ஊராட்சியின் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. சிபிஎம் முத்துப்பேட்டை ஒன்றியக்கு ழுவின் சார்பாக நடைபெற்ற இம்மாநாட்டி ற்கு கே. அஜ்மீர்கான் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கே. பாலசுப்பிரமணியன் முன்னி்லை வகித்தார். கே. ஸ்ரீதர் வரவேற்றார். விதொச ஒன்றிய செயலாளர் பி.வி.கனகசுந்தரம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒன்றிய செயலாளர் என். ராஜேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள். மாநாட்டில் உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியின் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி மாநாட்டை முடித்து வைத்து சிறப்புரையாற்றினார்.