tamilnadu

img

சத்துணவு ஊழியர் பேரவைக் கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக,18- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க திருச்சி மாவட்ட பேரவை கூட்டம் மிளகுபாறையில் ஞாயிறு அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை துணைத்தலைவர் அமுதா வாசித்தார். கூட்டத்தை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வாசித்தார். வரவு, செலவு அறிக்கையை பொருளாளர் ஆரோக்கியசாமி சமர்ப்பித்தார். அலுவலர் சங்க மாநில தலைவர் லெட்சுமணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விவேகானந்தன், செயலாளர் வளன்அரசு, டிஎன்ஆர்டிஓஏ மாநில துணைத்தலைவர் பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் பெரியசாமி சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில், தமிழக அரசின் நிரந்தர திட்டத்தில் பணியாற்றியக் கூடிய சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வாரிசு பணி தாமதமின்றி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் சத்தியவாணி வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் மல்லிகா நன்றி கூறினார்.