தரங்கம்பாடி, மார்ச் 16- நாகை மாவட்டம் சீகன் பால்கு மன்றத்தில் தரங்கம் பாடி வட்ட ஓய்வுபெற்ற அலு வலர் சங்கம் 38 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பேரவை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலை வர் ராஜ மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலை வர் எர்னெஸ்ட் ஸ்வீட்ராஜ் முன்னிலை வகித்தார் செயலாளர் சுப்ரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் கிருஷ்ணசாமி தீர்மானங்க ளை வாசித்தார். பூம்புகார் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், மூத்த உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகளை பாராட்டிப் பேசினார். அப் போதுஅவர் பேசியதாவது: மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறி விப்பார் என்று பேசினார். நகைச்சுவை நாவலர் சண்முகவடிவேல், ஜலால் முகமது, ஜெயராஜ் பொன் னையா ஆகியோர் உறுப்பி னர்களுக்கு பரிசளித்தனர். மேலும் நாகை மாவட்ட கருவூல அலுவலர் முருக வேல், சங்க மாநில துணைத் தலைவர் ராஜகோபால், மாவட்டத்தலைவர் கலிய மூர்த்தி, ஓய்வுபெற்ற மாவட்ட கூடுதல் கருவூல அலுவலர் மணிவண்ணன், உதவி கரு வூல அலுவலர் மோகன் ஆகி யோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.