tamilnadu

img

நல்லாசிரியர் விருது வழங்கல்

தஞ்சாவூர் செப்.6- ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் தஞ்சை குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரனுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. வீ.மனோகரன் 15 ஆண்டு பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 2 ஆண்டு பெண்கள் பள்ளியிலும் முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 2015 முதல் குருவிக்கரம்பை அரசு பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.  கடந்த ஆண்டு 10, 11, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தஞ்சை மாவட்ட அளவில் அரசுப்பள்ளிகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி.  வீ.மனோகரன், சக ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்களிடம் வலியுறுத்தினார். விருது பெற்ற வீ.மனோகரனை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், லயன்ஸ், ரோட்டரி சங்கத்தினர் உள்பட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

தரங்கம்பாடி

நாகை மாவட்டம் சங்கரன்பந்தல் அரசினர் மேல்நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் தி.அசோகனுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற தலைமையாசிரியர் அசோகனுக்கு பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை எஸ்.பவுன்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர்.