புலம் பெயரும் தொழிலாளர் பயிற்சி முகாம்
தஞ்சாவூர், ஜன.23- தஞ்சாவூர் அருகே வல்லத்தில் உள்ள பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தஞ்சாவூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செவ்வா யன்று அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமி ழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம் சார்பில் புலம் பெய ரும் தொழிலாளர்களின் பயண முன் னேற்பாட்டிற்கான முதன்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) த.முருகன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் க.இரத்தினவேல் முன்னிலை வகித்தார். முகாமில், “சட்டப் படியான ஆவணங்கள், வேலைக்கான விசாவுடன் முறையாக வெளிநாடு செல்ல வேண்டும் உள்ளிட்டவை அறிவுறுத்தப் பட்டன. இதில் கல்லூரி மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.
பொறுப்பேற்பு
தஞ்சாவூர், ஜன.23- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வராக முனைவர் நா.தனராஜன் புதன்கிழமை பதவியேற்றார். கல்லூரி தமிழ்த்துறைத் தலைவரான இவர், கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் முழு கூடு தல் பொறுப்புடன் கல்லூரியின் பொறுப்பு முதல்வராகப் பணியாற்றி வந்தார். தற்போது கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண் டார். பத்து நூல்களின் ஆசிரியரான இவர் 160 க்கும் மேற்பட்ட தமிழாய்வுக் கருத்த ரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளி யிட்டதுடன், சிங்கப்பூர், மலேசியா நாடு களில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்று ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரது நெறிகாட்ட லில் 56 மாணவர்கள் எம்.பில் பட்டத்தினை யும், 17 மாணவர்கள் டாக்டர் பட்டத்தினை யும் பெற்றுள்ளனர். இவர் தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பாடத்திட்டக்குழுவின் தலைவராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.,பாடத்திட்டக்குழு உறுப்பினராக வும் உள்ளார்.
மக்கள் தொடர்பு முகாம்
புதுக்கோட்டை, ஜன.23- புதுக்கோட்டை கோட்டம், கந்தர்வக் கோட்டை தாலுகா, நொடியூர் கிராமத்தில் 29 அன்று காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் பொதுமக்கள், அரசுத் துறைகளினால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பெற்றிடுமாறும், தங்கள் குறைகள் குறித்து, மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு செய்து பயனடையுமாறு ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
பொது விநியோக குறைகளை தெரிவிக்கலாம்
புதுக்கோட்டை, ஜன.23- புதுக்கோட்டை மாவட்டத்தில் 26 அன்று நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் பொது விநி யோகத் திட்ட தொடர்பான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள லாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது. மாவட்டத்தில் 26 அன்று குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளின் பட்டி யல் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியின் கிராம சபை முன்பாக வைக்கப்பட உள்ளன. பொது விநியோகத் திட்ட செயல்பாடு கள், அத்தியாவசியப் பொருட்கள் பெறு வதற்கான குடும்ப அட்டைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்து கிராம சபைக் கூட்டங்களில் விவாதிக்கப்பட உள்ளன. கூட்டங்களில் தெரிவிக்கப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்ட குறைதீர்க்கும் அலுவலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 7 தினங்களுக் குள் தீர்வு காணப்படும். மேலும், நியாய விலைக் கடைகளின் கணக்குகளை சமூக தணிக்கைக்கு உட்படுத்தி குடும்ப அட்டை தாரர்கள் தெரிவிக்கும் குறைபாடுகளை பதிவு செய்து குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும். எனவே, கிராம ஊராட்சி களில் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் திரளாக கலந்துக் கொண்டு பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் தொடர்பான தங்கள் கருத்துக்களையும், குறைகளையும் தெரிவிக்கலாம்.
வேஷ்டி- சேலை வழங்கல்
பொன்னமராவதி, ஜன.23- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் அரசின் இலவச வேஷ்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பக வாண்டிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற விழா விற்கு ஊராட்சி மன்றத் தலைவர் தீபா சிதம்பரம் தலைமை வகித்தார். பொன்னமராவதி ஒன்றிய சேர்மன் சுதா அடைக்கலமணி ரேசன் அட்டைதாரர்களுக்கு வேஷ்டி சேலை வழங்கினார். துணை வாட்டாட்சி யர் வெள்ளைச்சாமி, வருவாய் ஆய்வாளர் ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார். அதே போல் தொட்டியம்பட்டி ஊராட்சியில் தலைவர் கீதா சோலையப்பன் தலைமையில் வேஷ்டி சேலை வழங்கப்பட்டது.