tamilnadu

img

புதிய நடைமுறையை கைவிட லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

திருவாரூர், மே 7-அரவை பணிக்காக அனுப்பப் படும் நெல் மூட்டைகள் அரிசி ஆலைஉரிமையாளர்களுக்கு சொந்தமான லாரிகளில் மட்டுமே ஏற்றப் படும் என்ற புதிய நடைமுறையால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இந்த நடைமுறையை கைவிட வேண்டும்என்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் லாரி உரிமையாளர்கள் முறையிட்டனர்.இதுகுறித்து லாரி உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் அய்யப்பன், பொதுச்செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் அளித்த கோரிக்கை மனுவில், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 3,200 லாரிகள் இயங்கி வருகின்றன. இந்த லாரிகள் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் மூலம்விவசாயிகளிடமிருந்து கொள் முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை திறந்தவெளி சேமிப்புகிடங்குகளுக்கும், அரவைகளுக்காக மாவட்ட அரிசி ஆலைகளுக்கும், வெளி மாவட்டங்களுக் கும் அனுப்பி வைப்பதற்காக திருவாரூர், நீடாமங்கலம் ஆகிய ரெயில்நிலையங்களுக்கும் ஏற்றி செல்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இதற்காக தாலுகா வாரியாக லாரியினை பதிவு செய்து நுகர் பொருள் வாணிப கழகத்துடன் ஆண்டுதோறும் ஒப்பந்தம் செய்துஅதன் அடிப்படையில் வாடகை நிர்ணயித்து பணியாற்றி வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் குடும்பத்தினர் இந்த லாரி தொழிலை நம்பி உள்ளனர். இந்நிலையில் அரிசி ஆலை உரிமையாளர்களே தங்களுடைய அரவை பணிக்கான நெல் மூட்டைகளை தங்களுடைய சொந்த லாரிகளில் சுமை ஏற்றி கொள்வதாக கூறி உள்ளனர். இந்த நடைமுறையைஎதிர்த்து கேள்வி கேட்கும் லாரி உரிமையாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். எனவே லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கையை உணர்ந்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அதில் கூறப் பட்டுள்ளது.