சீர்காழி, ஏப்.1-
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடைக்கோடி கிராமம் கொடியம்பாளையம். இந்த கிராமம் நான்கு பக்கமும் கொள்ளிடம் ஆறுமற்றும் பழையாறு கடலால் சூழப்பட்டுதீவு போல் கிடக்கிறது. இதில் சிதம் பரத்திலிருந்து கொடியம்பாளையம் கிராமத்திற்கு செல்ல பாலப் போக்குவரத்து உள்ளது.சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த கிராமத்திற்கு தேர்தல் நேரத்தில்வாக்குப் பெட்டியை போலீஸ் காவலுடன் அதிகாரிகள் படகில் எடுத்துச் செல்வதும் வாக்குப் பதிவு முடிவு பெற்ற பிறகு இரவு நேரமானாலும் கொடியம்பாளையத்திலிருந்து பழையாறு துறைமுகத்துக்கு படகிலேயே எடுத்து வருவதும் வழக்கமாக இருந்துவந்தது.கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது முதன் முதலில் வாக்குப் பெட்டிதரை வழியாக கொள்ளிடத்திலிருந்து சிதம்பரம் வழியாக எடுத்து செல்லப்பட்டது. ஆனால் கொடியம்பாளையத்திற்கு நீர் வழியே செல்லும் தூரம்குறைந்தளவே உள்ளது. இதனால் தற்போது நடைபெறவுள்ள தேர்தலில், கொடியம்பாளையத்திற்கு சென்று வர தேர்தல் அதிகாரிகள் படகு சவாரியை மேற்கொண்டனர்.சீர்காழி சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர் எம்.வேலுமணி, வட்டாட்சியர் சபீதாதேவி உள்ளிட்டோர்கொடியம்பாளையம் தீவு கிராமத்திற்குசெல்ல பழையாறு வந்தனர். அங்கிருந்து ஒரு படகு மூலம் கொள்ளிடம் ஆறு வழியாக முகத்துவாரம் சென்றுகடல் மார்க்கமாக கொடியம்பாளையம் தீவு கிராமத்தை அடைந்தனர். பின்னர் அக்கிராமத்தில் அமைக்கப்பட் டுள்ள வாக்குச் சாவடியை ஆய்வு செய்தனர்.