india

img

மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும்! - கேரள முதல்வர் பினராயி விஜயன்

ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்-பரிவாரிகளுக்குள் ஆழமாக வேரூன்றி இருக்கும் சிறுபான்மையினர் மீதான விரோதப்போக்குக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற இரு அவைகளில் வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 7 கோடி ஹெக்டேர் நிலத்தை சொந்தமாக கத்தோலிக தேவாலயங்கள் வைத்திருக்கிறதாகவும், இந்தியாவிலேயே பெரிய நிலவுடமையாளராக கத்தோலிக தேவாலயங்கள் உள்ளன எனவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆர்கனைசர் இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்-பரிவாரிகளுக்குள் ஆழமாக வேரூன்றி இருக்கும் சிறுபான்மையினர் மீதான விரோதப்போக்குக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடனேயே, கத்தோலிக்க தேவாலயங்களின் நிலம் குறித்து ஆர்.எஸ்.எஸ்-இன் ஆர்கனைசர் இதழில் கட்டுரை வெளியீடு. சங்-பரிவாரிகளுக்குள் ஆழமாக வேரூன்றி இருக்கும் சிறுபான்மையினர் மீதான விரோதத்தை இது அம்பலப்படுத்துகிறது.
சிறுபான்மையினரையும், அவர்களின் நிறுவனங்களையும் குறிவைத்து தனிமைப்படுத்த வேண்டும் என்ற முயற்சியை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது. இதனை எதிர்த்து மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.