கூட்டாட்சி இல்லை என்றால் இந்தியா வலுவிழந்து விடும்!
மாநிலங்களின் கூட்டமைப்பே இந்தியா
மாநிலங்களை உள்ள டக்கிய கூட்டாட்சி இல்லை என்றால் இந்தியா வலுவிழந்து விடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ் ணன் கூறினார். கட்சியின் அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, ‘கூட் டாட்சிக் கோட்பாடே இந்தியா வின் வலிமை’ என்ற தலைப்பில் மதுரையில் வியாழக்கிழமை (ஏப்.3) நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் அவர் பேசியது வருமாறு:
ஒன்றிய அரசுக்கு எதிராக போராடும் தமிழ்நாடு - கேரளம்
‘மாநிலங்களின் உரிமைக ளைப் பறிக்க அனுமதிக்க மாட் டோம்’ என்பதை வலியுறுத்தும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்தும் கருத்த ரங்கில் ஒன்றிய அரசின் உரிமைப் பறிப்புக்கு எதிராக போராடி வரும் தமிழக - கேரள முதல மைச்சர்கள் பங்கேற்றிருப்பது சாலப் பொருத்தமானதாகும். நமது அரசியல் சாசனத்தை டாக்டர் அம்பேத்கர் உருவாக் கியபோது, ‘இந்தியா என்றால் என்ன?’ என்று கேள்வி எழுந்தது. அதற்கு அரசியல் சாசனத்தின் முதல் வார்த்தையிலேயே, ‘மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா’ என்று கூறப்பட்டது. இதன் மற்றொரு அர்த்தம் என்ன வென்றால், ‘மாநிலங்கள் இல்லை என்றால், இந்தியாவே இல்லை’ என்பதுதான்.
மாநிலங்களை ஏற்றுக்கொள்ளாத ஆர்எஸ்எஸ் - பாஜக
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்குவதை யும், ‘மாநிலங்களை உள்ள டக்கிய கூட்டமைப்பு தான் இ்ந்தியா’ என்பதையும், இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக-வும் அதன் குருபீடமாக உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒருபோதும் ஏற்றுக்கொண்டது இல்லை. மாநிலங்கள் என்ற அமைப்பு முறை இருந்தால், இந்தியா பிரிந்து போவதற்கான வாய்ப்பு அதிகம் என்று அவர்கள் சொல்லி வருகிறார்கள். இதற் காகத்தான் மாநிலங்கள் அனைத் தையும் அழித்து, ‘ஒரே அதிகா ரம், ஒரே மையம், ஒரே தலைவர்’ என்று சொல்லிக் கொண்டிருக்கி றார்கள். இதற்கான அஜெண்டா வை நோக்கி ஒன்றிய அரசு சென்று கொண்டிருக்கிறது. அதற்காக அவர்கள் அனைத் தையும் மாற்ற முயற்சிக்கி றார்கள்.
மாநிலங்களை ஒழிப்பது தான் அவர்களின் மறைமுகத் திட்டம்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு’ என்கிறார்கள். ஒற் றைக் கலாச்சாரத்தைத் திணித்து நாட்டின் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் தலைகீழாக புரட்டிப்போடுகிற நடவடிக்கை யில் இறங்கியுள்ளனர். ஆர்எஸ்எஸ் வழியில் வந்த நமது மாநில ஆளுநர், தமிழ்நாடு என்ற வார்த்தையை- அந்த பெய ரையே உச்சரிக்க மாட்டேன் என்கிறார். ‘தமிழ்நாடு என்று சொன்னால் அது தனிநாடு என் அர்த்தமாகி விடுகிறது’ என்று அவர் கூறுகிறார். எனவே ஆளு நர் மாளிகை அழைப்பிதழில் தமிழகம் என்றுதான் போட்டார் கள். தனி மாநிலமே கூடாது, தனி நிர்வாகமே கூடாது, தனி ஆட்சி முறையே கூடாது, மாநிலங்க ளுக்கு தனி அதிகாரமே கூடாது என்பதுதான் அவர்கள் உள்ளத் தில் மறைந்துள்ள வன்மமாகும்
மொழிவழியில் அமைந்த மாநிலங்கள் வெறுமனே நிர்வாக ஏற்பாடு அல்ல!
பல நாடுகளில் மாநிலங்கள் உள்ளன. அமெரிக்காவில் 26-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருக்கின்றன. பல நாடுகளில் நிர்வாக அமைப்புக்காக பல மாநிலங்களை பிரித்திருக்கிறார் கள். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை மாநிலங்கள் என்பது ஒரு நிர்வாக அமைப்பு மட்டும் அல்ல. ஒரு ஆட்சியை செலுத்துகிற அமைப்பு மட்டும் அல்ல. தேசிய இனங்களை பிரதி நிதித்துவப் படுத்தக்கூடிய ஒரு மொழியின் அடையாளத்தை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய மக்களின் வாழ்க்கை நிலையை உறுதிப்படுத்தக்கூடிய அடையா ளங்களை கொண்டிருப்பதா கும். இதனை ஒன்றிய பாஜக அரசு பார்க்க மறுக்கிறது.
அரசுகளின் உரிமையல்ல; மக்களின் உரிமை!
மாநில உரிமை என்பது ஆட்சி யில் இருப்பவர்களின் உரிமை என்று பாஜக கருதுகிறது. நான் விரும்புகிற ஆட்சியாக இருந் தால் பணம் கொடுப்பேன்; இல் லாவிட்டால் எத்தனை நெருக்கடி கள் வந்தாலும், பிடிக்காத ஆட்சி யாக இருந்தால் நிதி தர மாட் டேன். வறட்சி வந்தால், வெள்ளம் வந்தால் அந்த மாநிலத்திற்கு நிதி வழங்கமாட்டேன் என்று சொன்னால் அது அகங்காரம். மாநில உரிமை என்பது மாநி லங்களை ஆளும் அரசுகளின் உரிமை மட்டுமல்ல மக்களின் உரிமையாகும். தமிழகத்திற்கு கல்வி நிதியைக் கூட ஒன்றிய அரசு தராமல் வைத்திருக்கிறது. எனவே தான், இன்று மாநிலங்க ளின் உரிமையை வலியுறுத்த மகத்தான போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள நாம் இந்த கருத்தரங்கை நடத்து கிறோம். இந்தியாவுக்கு வலிமை இருக்கிறது என்றால் அது கூட்டாட்சி என்பதில் தான் அந்த வலிமை உள்ளது. கூட்டாட்சி இல்லை என்றால் இந்தியா வலுவிழந்து விடும். இவ்வாறு கே.பால கிருஷ்ணன் பேசினார்.