கோவை, ஜூன் 11- கோவை அரசு மருத்துவமனையில் செயற்கை அங்கம் தயாரிக்கும் நிலையம் துவங்கும் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதனால், செயற்கை கால் வேண்டியவர்கள் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் டீன் காளிதாஸ் கூறுகையில், கோவை மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டு மின்றி திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், கேரளாவில் இருந்தும் தினமும் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தற்போது, அதிகள வில் வாகன விபத்துகளினால் பலர் கால்களை இழக்கும் நிலை ஏற்ப டுகிறது.
இதேபோல், சர்க்கரை நோய் மற்றும் புகைப்பிடித்தல் காரணமா கவும் கால்களை இழக்கும் நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. இப்படி, கால்களை இழக்கும் நபர்கள் செயற்கை கால்களை பொருத்த சென்னை செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதன்படி, கோவை யில் இருந்து மாதத்திற்கு 10 பேர் சென்னை சென்று செயற்கை கால் களைப் பொருத்தி வந்தனர். இதற்கு தீர்வு காணும் வகையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் செயற்கை அங்கம் தயாரிக்கும் நிலையம் துவக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. இப்பணிகள் தற் போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த செயற்கை அங்கம் பொருத்தும் சிகிச்சையானது தமிழக முதலமைச் சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ளது. இதனால், செயற்கை அங்கம் பொருத்துவதற்கான செலவை காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெறலாம் என தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக முட நீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சைத் துறையின் தலைவர் வெற்றிவேல் செழியன் கூறுகையில், “மருத்துவ மனை டீன் உத்தரவின் பேரில் தற் போது செயற்கை அங்கம் தயாரிக் கும் நிலையம் பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மாதத்திற்கு 10 பேருக்கு செயற்கை கால் அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதனால், செயற்கை கால் தேவைப்படும் நபர்கள் புறநோயா ளிகள், எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு 13வது வார்டில் சென்று தங் களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் போது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் காப்பீடு அட்டையை கொண்டுவர வேண்டும். இந்த செயற்கை அங்கம் தயாரிக்கும் நிலையத்தின் மூலமாக கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங் களைச் சேர்ந்தவர்களும் பயனடை வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.